பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

வ.உ.சி. மணிமண்டபத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்



திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியைத் 
தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 

மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் பூ. ஜெகநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டலக் குழுத் தலைவர்கள் ந. மோகன், கி. மாதவராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையர் அர. லட்சுமி, மாநகர பொறியாளர் ஜெயசேவியர், மாநகர மருத்துவ அலுவலர்கள் பாலகணேஷ்குமார், உதவி ஆணையர்கள் ஆ. பெருமாள், டி. சாமுவேல்செல்வராஜ், சாந்தி, உதவிப் பொறியாளர்கள் பாஸ்கரன், அனிதா, மாமன்ற உறுப்பினர்கள் பொன். அழகுராஜ், பே. கணேசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோரிக்கை மனு: செப். 5ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆகவே, மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வ.உ.சி. மணிமண்டபம் பகுதியைத்  தூய்மைப்படுத்த வேண்டும். அன்றைய தினம் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, திருநெல்வேலி வ.உ.சி. கல்வி அறக்கட்டளை, சைவநெறி இளைஞர் பேரவை அமைப்புகள் சார்பில் மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு திரண்ட பெண்கள்: மேலப்பாளையம் அருகே மேலகருங்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என அப்பகுதி ஆண்கள், பெண்கள் மாநகராட்சியில் திரண்டு மேயரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் குடிநீர்த் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதித்தமிழர் பேரவை: பாளையங்கோட்டை ஏ.ஆர். லைன் பகுதியில் புதிதாக குடிநீர்த் தொட்டி அமைத்து, அங்கு வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்; ஏற்கெனவே உள்ள குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்; கழிவுநீர் ஓடையைச் சீரமைக்க வேண்டும்; அங்குள்ள கழிப்பிடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment