பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 8, 2014

அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்தபோது காளீஸ்வரர் இரட்டை ராஜகோபுரங்களில் தீ பற்றி எரிந்தது !

ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான செய்தியை நம்பி அ.தி.மு.க. வினர் அராஜகம்

காளையார் கோவில் – அக்டோபர் 08, 2014
ழல் தடுப்பு சட்டத்தில் கீழ் தண்டிக்கப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான தகவலின் பேரில் காளையார்கோவில் அ.தி.முக.வினர் ஒன்றிய பெருந்தலைவர் ஆரோக்கியசாமி, மகளிர் அணி ஜாக்குலின்அலெக்ஸ் தலைமையில் பட்டாசு வெடித்தபோது காளீஸ்வரர் இரட்டை ராஜகோபுரங்களில் தீ பற்றி எரிந்தது.
temple-koburam-fire
வரலாற்றுச் சிறப்பு மிக்க மருது சகோதரர்களால் கட்டப்பட்டது காளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம். இது மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திற்கு இணையாக மக்களால் பார்க்கப்படுகிறது. கடந்த 1997-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு பின்பு ஒரு வருடத்திற்கு முன்பு கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்காக வர்ணம் பூசும் பணி நடைபெற்றுவந்தது. அதற்காக இரண்டு ராஜகோபுரங்களிலும் சாரம் கட்டி வைத்திருந்தனர்.

சம்பவத்தன்று அ.தி.மு.க.வினரின் ஒரு பகுதியினர் தங்கள் தலைவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான தகவலின் பேரில் வெடி வெடித்து கொண்டாடினர். அப்போது இரவில் வாணவேடிக்கைக்காக வெடிக்கப்படும் வெடிகளை பகலில் ராஜகோபுரத்தின் அருகில் வெடித்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கோபுரத்தின் மீது பட்டுவிடும் என தடுத்ததையும் மீறி வெடி வெடித்ததில் பட்டாசு தீப்பொறி பெரிய ராஜகோபுர சாரத்தில் உள்ள தென்னங்கீற்றில் பட்டதில், முதலில் பெரிய கோபுரத்தில் தீப்பற்றியது. பின்னர் சின்ன கோபுரத்தில் தீ பரவியது. சில நிமிடங்களில் இரண்டு ராஜகோபுரங்களில் உள்ள தென்னங்கீற்றுகள் தீ அணைப்பு துறையினர் வருவதற்குள் இரண்டு கோபுரங்களிலும் முழுமையாக பற்றி எரிந்து விட்டது.
மழை பெய்து தீ மேலும் அருகிலுள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ பற்றியதில் வர்ணம் பூச்சு நிறம் மாறியது. சிற்பங்கள் சேதமடைந்தது. கோபுரத்தில் இருந்த புறாக்கள் தீயில் கருகின. யானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது. சப்பரம் சேதமடைந்துவிட்டது. பொதுமக்கள் கொதித்தெழுந்து பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு செய்தனர். இது திட்டமிட்ட சதி என்று காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்யதனர்.
இது குறித்து காளையார்கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து காளையார்கோவிலைச் சேர்ந்த ஏடகநாதன் மகன் முத்துமருதுபாண்டியன், ஊத்துப்பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் மகன் சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இன்று கடை அடைப்பு நடத்தி, இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பகுதி மக்களால் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காளையார் கோவில்
நன்றி :_

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment