பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 7, 2015

யுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்

இந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல; அரசின்/பேரரசின் எல்லைகளை மாற்றியமைத்த போர்களும் அல்ல; நாடு பிடித்து மண்ணாளும் மன்னனின் ஆசைக்குப் பலியான வீரர்களால் புகழ்பெற்ற மன்னனின் வரலாறுகளும் அல்ல.

இப்போர்களில், கொத்துக்கொத்தாக மாய்ந்த வீர்ர்களைக் காணமுடியாது. போருக்குத் தொடர்பற்ற அப்பாவி மக்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள் அவலமாய் மாய்ந்தனர் என்று புள்ளிவிவரங்ளை அடுக்கமுடியாது. அப்படி மாய்ந்தனர் என்ற செய்தியையும் கேள்விப்படவும் முடியாது. சரணடைந்தவர்களைக் கொல்லும் கீழ்மையை, போர் யுக்தியில் ஒன்றாகக் கொள்ளும் தீர்மானத்தை அறிய முடியாது.

இப்போர்களில் மாய்ந்த வீரன், ஒருவனே. அரிதாக இருவர் மாய்ந்த செய்தியை அறியமுடியும். வீரனின் மரணத்துடனே இப்போர் முடிந்துவிடுகிறது என்பது ஒரு குறிப்புதானேயன்றி, மரணம் கட்டாயமன்று. ஆனால், இப்போரைப் புரிந்தவர்களால் வீர மரணம் விரும்பப்பட்டது; சமூகத்தினரிடையே போற்றப்பட்டது; வீர மரணத்தைத் தழுவியவர்களை வணங்குவது இயல்பான மரபாக, சந்ததிகளுக்குத் தலைமுறைக்குத் தலைமுறை கடத்தப்பட்டது.

 
இலக்கியங்களும் வரலாற்று நூல்களும், பேரரசர்களின் வீரத்தை, கொடையைப் போற்றி, மரணமில்லாப் பெருவாழ்வை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றன. இருந்தும், இவர்கள் தெய்வமாக உறைந்த வழிபடும் நிலையில் உள்ள கல்லைக் காணமுடியாது உள்ளது. மன்னனின் நினைவில் எழுப்பப்பெற்ற ‘பள்ளிப்படைக் கோயில்*களில்கூட வணங்கப்படும் உருவம், லிங்கமே அன்றி மன்னனின் பீடும் பேரும் கூடிய உருவமன்று.
வீரம் வித்திக் கல்லான இவர்களின் வரலாறு, பெரும்பாலும் இவர்கள் கடவுளர்களாக வடிக்கப்பட்ட நடுகல்லிலேயே சிறு செய்தியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இருந்தும், பெரும்பாலான உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள், செய்தி பொறிக்கப்படாதவை. அடையாளம் காணப்பட்ட நடுகற்களைக் கொண்டு வகைப்படுத்தும்போது செய்தி சொல்பவை 35 சதவீதமே. மீதமுள்ள 65 சதவீதம் செய்தி பெறாதவை எனலாம். ஆனால், விதிவிலக்கின்றி இவை வணக்கத்திலும் வழிபாட்டிலும் இருக்கின்றன. இன்று கைவிடப்பட்டவை என்று தோன்றும் நிலையில் உள்ளவைகூட, முன்னர் வணக்கத்திலும் வழிபாட்டிலும் இருந்தவை என்பதில் கருத்து முரண் இராது.

 
வீரன் இறந்த இடத்தில், ஊர் அருகே பாதை ஓரத்தில், ஊர்ப் பொதுஇடத்தில், ஊர் எல்லையில், மரத்தடியில், வீட்டில், கோயிலில் என எங்கெங்கும் இக்கடவுளர்கள் நிலைநிறுத்தி வணங்கப்பட்டதை, தற்கால அறிதல்களில் இருந்து அறிய முடிகிறது.

 
மனித இனத்தில், வீரவணக்கத்தின் தொன்மை குறித்து அறிய மிகப் பழமை வாய்ந்த சான்றுகள் இன்னும் கிட்டாமல் உள்ளன. மாந்தரினத்தின் பரிணாம வளர்ச்சி, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கின் எழுச்சி மற்றும் இவற்றுக்குச் சான்றாக விளங்கும் தொல்லியல் எச்சங்களைக் கொண்டு பார்க்கும்போது, இடைநிலைப் பழங்கற்காலத்தில் இருந்தே, இறந்தோரை மாந்தரினம் முறையாக அடக்கம் செய்த சான்றுகளைப் பெறமுடிகிறது. இறந்தவர்களின் உடல் சிவப்பு நிறக்கலவையால் பூசப்பட்டுக் காட்சி தருவது, பிற்கால வாழ்வில், மறுபிறப்பில், வளமையில் மனித இனம் கொண்டிருந்த நம்பிக்கைச் சிந்தனையை அடையாளப்படுத்துவதாகும். மேலும், சிவப்பு நிறம் வீரத்தையும் ஆவேசத்தையும் சுட்டும் நிறக்குறியாக மனிதனால் பயன்படுத்தப்படுவதாகும். எனில், சிவப்பு நிறம் பூசப்பட்டுப் புதைக்கப்பட்ட இடைநிலைப் பழங்கற்கால மனித உடல், வீர மரணம் அடைந்தவனின் உடல் எனல் தகும்.

 
கடைநிலைப் பழங்கற்காலத்தின் இறுதிக் காலகட்டத்தில், வேட்டையிலும் உணவுதேடுவதிலும் வாழ்ந்த மனித இனத்தினர், வேட்டையின்போது வீரத்தின் இன்றியமையாமையை அறிந்தனர் எனலாம். வேட்டைக்கு முன் அவர்கள் மேற்கொண்ட குழு நடனங்களை அல்லது வேட்டைக்கள மாதிரிகளைச் சித்தரிக்கும் தொல்பழங்கால குகை ஓவியங்கள், வீர வழிபாட்டுச் சிந்தனையை அடையாளப்படுத்துவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும். நுண்கற்காலத்தில், இவ்வழிபாடு இன்னும் வலிமை பெற்றிருக்க வேண்டும். புதிய கற்காலத்தில், நிச்சயமான சில வீர வழிபாட்டு முறைகள் வழக்குபெற்றிருந்தமைக்குப் பலவகை தொல்பொருள் எச்சங்கள் சான்றாக உள்ளன.
மனிதன் புரிந்த யுத்தங்களில், ஆநிரைக்காக்கவை முதன்மையானவை. இலக்கியங்களும், இலக்கண நூல்களும் இந்த யுதங்களையே போற்றின. இலக்கணங்கள் வகுத்தன.  விலங்குகளுடன் மனிதன் புரிந்த யுத்தங்கள் குறித்து பண்டைய நூல்கள் கூறாதிருப்பினும், ஆநிரைப் போருக்குப் அடுத்த நிலையில் இருப்பவை புலி, யானை, பன்றி, குதிரை, பாம்பு முதலான விலங்குடனான யுத்தங்களே.

 
வரலாற்றுக்காலத்தின் இலக்கியங்களும் வரலாற்று நூல்களும் வழங்காத மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்றவர்கள் இவ்வீரர்கள்; வணங்கப்படும் தெய்வங்களாகக் கல்லில் இவர்கள் உறைந்துள்ளனர். இவர்களின் இயற்பெயர்களை நினைவுகூர்வோர் இக்காலத்தில் எவருமிலர். இவர்களுக்குத் தற்காலத்தில் சில பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பொதுப்பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம். “வேடியப்பன், கரி வேடியப்பன் / கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயானாரப்பன், ஐயனார், கிருஷ்ணாரப்பன், மீனாரப்பன், சன்யாசியப்பன், ஆஞ்சநேயர் கல், சித்தப்ப சாமி, வீரபத்திரசாமி, சாணாரப்பன்”என்பவை சில. “மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஊமை வேடியப்பன், இரட்டை வேடியப்பன், ஓட்டை வேடியப்பன்” என சில பட்டப்பெயர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. சில, அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேடு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் வீரன் என்பதுடன் தொடர்புடையனவாக உள்ளதைப் பெயராய்வு வெளிப்படுத்துகிறது. (பெயராய்வு பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்)

 
இக்கடவுளர் அமர்ந்த இடங்களின் பெயருடன் கோயில் ஒட்டுப்பெற்று‘வேடியப்பன் கோயில்’, ‘வேடன் கோயில்’, ‘கிருஷ்ணாரப்பன் கோயில்’, ‘முனியப்பன் கோயில்’, ‘ஐயனார் அப்பன் கோயில்’ என அழைக்கப்படுகின்றன.

 
இப்பெயர்களுள் ‘வேடியப்பன்’ பெயர் பெருவழக்கில் உள்ளது. அடுத்தநிலையில் ‘முனியப்பன்’, ‘ஐயனார்’ இடம்பெறுகின்றன.
*
அடிக்குறிப்பு -
பள்ளிப்படைக் கோயில் - இறந்தவர் நினைவாகக் கட்டப்பட்ட கோயிலே பள்ளிப்படை என்று அகராதி பொதுவாக விளக்கம் அளித்தாலும், மரபில் அரசனைப் புதைத்த இடத்து எழுப்பப்பட்ட சமாதிக் கோயில் ‘பள்ளிப்படைக் கோயில்’ ஆகும்.
உதாரணம் -
1. முதலாம் ஆதித்த சோழன் நினைவாக ஆற்றூரில் எழுப்பப்பட்ட ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரம் கோயில்.
2. அரிஞ்சய சோழனுக்கு மேற்பாடியில் எழுப்பப்பட்ட அரிஞ்சைகை ஈஸ்வரம் கோயில்.
3. ராஜராஜனின் மனைவி பஞ்சவன் மாதேவிக்குப் பழையாறையான முடிகொண்ட சோழபுரத்தில் எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவீச்சுரம்.

***

மணி பாரி - அத்தியாயம் 2-ல் இடுகை செய்யப்பட்ட 4-வது கருத்துப் பதிவு...
வேளிர் 12 குடியினர் அல்ல, நசினர்கிநியரும் அப்படி சொல்லவில்லை. சேர சோழ பாண்டியரும், "அரி வழி வந்த 12 வேளிர்கள்" இந்த நாட்டை ஆண்டார்கள் என்று கல்லாடம் கூறுகிறது வேளிர்கள் அனைவரும் பன்றி வேளிர்களே. (அடிக்கோடு த.பார்த்திபனால் இடப்பட்டது).
பதில்
  • நச்சிநார்க்கினியரின் கூற்றை பல பழைய பதிப்புகளின் தொல்காப்பிய சிறப்புப் பாயிர உரையில் காணமுடியும். நீங்கள் எந்தப் பதிப்பைக் கொண்டு நச்சினார்க்கினியர் அப்படிச் சொல்லவில்லை என்ற முடிவுக்கு வந்தீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். இனி, ஆய்வாளர்களும் மாணவர்களும் அப்பதிப்பிலிருந்து விலகியிருக்க உங்கள் தகவல் உதவியாக இருக்கும்.
பழைய பதிப்பு ஒன்றை நீங்கள் தேடி அடைய முடியாவிட்டால், இங்கு குறிப்பிட்டுள்ள இரு நூல்களில் இருந்தும் நச்சிநார்க்கினியர் கூறியதை தெரிந்துகொள்ளுங்கள்.
1. தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் - உரை வளம், (பதிப்பு ஆசிரியர்) சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, (1980), ப.101.
2. அபிதான சிந்தாமணி, சிங்காரவேலு முதலியார், ஏசியன் எஜூகேசன் டிரஸ்ட், சென்னை, (1982), ப.28.
  • கல்லாடம் செய்தியை அறிவேன். ஆய்வு ‘அருவாளர்கள்’ மீதானது என்பதால், அருவாளரைப் பற்றி குறிப்பிடாத கல்லாடத்தின் செய்தியை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
  • அது என்ன “வேளிர்கள் அனைவரும் பன்றி வேளிர்கள்”? இடுகையில் சொல் பிசகா? என்று தெரியப்படுத்துங்கள். உடன், நீங்கள் இடுகை செய்ய விரும்பிய வார்த்தையும்.

***

மணி பாரி – அத்தியாயம் 3-ல் வைக்கப்பட்ட முதலாவது கருத்துப் பதிவு…
அருவாளர் என்போர் வேளிர்வகையினரே, நன்னனும் நந்தனும் ஒருவனே அவன் அருவ குலத்தவன், அவன் சேதி என்று கூரிக்கொள்கிரன். இக்கல்வெட்டு நன்னன் சேய் நன்னனுடையது காலம் கிமு 3 – 4-ம் நுற்றாண்டு, கிடைத்த இடம் ஆந்திர நெல்லூர் மாவட்டம், கண்ட கூர் (கண்டி = எருமை, கண்டி ஊர்+கண்ட ஊர். (தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 2, எண்.531) "அருவாள குலத்து நந்த சேதி மகன் வீரன் சேதி செய்வித்த குகை" என்பதாகும், இக்கல்வெட்டு பிராகிருத பிராமி எழுத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு ஆகும். சேதி என்பதை சிலர் செட்டி என்றும் படிக்கின்றனர் (அத்தி கும்ப கல்வெட்டிலும் sethi என்றே இருக்கிறது, இதில் சேதி என்றே படிப்பது குறிப்பிடதக்கது). இந்த கல் வெட்டு "அரி வேளிர் குலம்" என்பது "அருவாளர் குலம்" என்று திரிந்து வழங்குகிறது. நச்சினார் கினியர் உரையில் "வெள்ளித்தம்பிரனின்" திரிபு வேலையை இந்த கல்வெட்டு நிருபிக்கும். அருவாளர், வேளிர் என்போர் ஒரே தொகுதியினரே, அவர்கள் ஆளும் நாட்டிற்கு ஏற்ப அவர்களின் கோடி - இலச்சினை பெயர்கொண்டு அழைக்கப்பட்டனர். அரிவாள் என்ற சொல் அருவாள் என்று இன்று மருவி வழங்குவது காண்க.
பதில்
  • என் அளவில், நந்த மரபுக்கும், நன்னன் மரபுக்கும் தொடர்பில்லை.
  • அருவாளர், வேளிர் என்பதில் உடன்பாடு இல்லை. சங்க இலக்கியம் மற்றும் பெயர் மரபு கொண்டு பார்க்கையில், அருவாளர்கள் இனக்குழுத் தலைமையிலேயே இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. நச்சினார்க்கினியரின் கூற்றை உற்று நேக்கினாலும் இந்த உண்மையை அறிந்துகொள்ளலாம். அவர் “பதினெண் வேளிரையும் அருவாளர்களையும்” என்று வேளிரை தனியாகவும், அருவாளரைத் தனியாகவும் குறிப்பிடுகிறார். அருவாளர், வேளிர் ஆயின், அவர் “அருவாளர் உள்ளிட்ட வேளிர்…” என்றே குறித்திருப்பார் என எண்ணல் தகும்.
  • நாம் இருவருமே அருவாளர் குறித்து சான்றை வழங்கும் ஒரே கல்வெட்டைத்தான் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறோம். (காண்க: யுத்தபூமி, அத்தியாயம்-2) படித்தறிதல் (வாசிப்பு) வேற்பாடுகள் சில பிரச்னைகளை ஏற்படுத்துவது உண்மையே என்பதை ஏற்கிறேன். இக்கல்வெட்டில் வரும் sethi-ஐ, காரவேலனின் சேதி மரபுடன் தொடர்புபடுத்துகின்றீர்கள் எனில், மேலாய்வு மூலம் அதனை நிறுவ அழைக்கிறேன்.
  • நன்னன் என்பது ஒரு குடிப்பெயர் பயன்பாடா அல்லது இயற்பெயர் பயன்பாடா என்று அறிவது இங்கு அவசியமாகிறது. இக்கல்வெட்டு குறிப்பிடப்படும் நன்னன் என்பது சேதி மரபில் ஒருவன். எனில், இங்கு நன்னன் பெயர் இயற்பெயராகிறது. சங்க இலக்கியம், குடிப்பெயரில் ஒருவனைக் காட்சிப்படுத்தும் நன்னன் வேறானவன் ஆகிறான் என்பது ஆய்வின் முக்கியப் புள்ளியாகிறது. ஏனெனில், குடிப்பெயரோ, இனப்பெயரோ, குலப்பெயரோ ஒரே பெயரில் வரும் மரபு வழக்கில் இல்லாதது.
  • இக்கல்வெட்டை நன்னன் மரபினருடன், நன்னன் சேய் நன்னனுடன் பொருத்தி ஆய்வு செய்வதில் உள்ள இடர்களை நான் கீழ்க்கண்டவாறு பட்டியல் செய்கிறேன்.
1. கல்வெட்டில் நன்னன் செய் நன்னன் அதாவது நன்னன் மகன் நன்னன் என்ற பயன்பாடு இல்லை. ‘நந்த செட்டி/சேதி மகன் சிறீவீரி’ என்று உள்ளதாகத்தான் படிக்கப்பட்டிருக்கிறது. எனில், சீறிவீரி அல்லது வீரன் என்பவனை சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு, ‘மலைபடுகடாம்’ பாடல் நாயகன் நன்னன் சேய் நன்னன் சிறீவிரி/ வீரன் என்று அழைக்கப்பட்டதற்கான இணைச் சான்று தேவை.
2. நன்னன் சேய் நன்னன், செங்கம் பகுதியை ஆட்சிபுரிந்தவனாக உள்ளவன். எனில், திருவண்ணாமலையை அடுத்த பல்குன்றக் கோட்டத்தில் இருந்த இவனது ‘செங்கன்மா நாடு’ நெல்லூர், கந்துகூர்/கண்டகூர் வரை பரவி இருந்தமை நிறுவப்பட வேண்டும்.
3. இக்கல்வெட்டின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டு அளவினது என்பதை நானும் ஏற்கிறேன். எனில், உங்கள் கருத்துப்படி, நன்னன் சேய் நன்னன் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் ஆகிறான். வரலாறு ஆசிரியர்களின் பொதுக் கருத்து ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அது. நன்னன் சேய் நன்னன் சங்க இறுதிக்காலத்தில் வாழ்ந்தவன். சங்ககாலத்தின் துவக்கம் குறித்து கருத்து மாறுபாடு இருப்பினும், சங்ககாலத்தின் இறுதி கி.பி. 200 - 250 என்பதில் கருத்து முரண்பாடு இல்லை. எனில், நன்னன் சேய் நன்னன் கி.பி. 200 என்ற காலக்கணக்கை ஒட்டியே ஆய்வு செய்யத் தகுந்தவனாக இருக்கிறன். நீங்கள் குறிப்பிடுவதுபோல் கி.மு. 300 அளவில் அல்ல.
4. அரி வேளிர் குலம்தான் அருவாளர் குலம் என்று திரிந்துள்ளது எனத் தெரிவிக்கின்றீர்கள். அரி என்பதற்கு நீங்கள் ஆய்வுக்குக் கொண்டுள்ள பொருளை அறியத் தாருங்கள். காரணம், உங்கள் அடுத்த வரி அருவாளரை அரிவாள் என்ற அருக்கும், வெட்டும் கருவியுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்கிறது. முதலில் குறிப்பிடும் அரி குலம், இறைவன் அரியுடன் தொடர்புடையதாக விரிவதாக உள்ளது. கோடி - இலச்சினைப் பெயர் என்ற தொடரும், இறைவன் தொடர்புடைய சிறப்புக் கூறல் அல்லவா!
  • அருவாளர் யார்? என்ற கேள்வி எழுப்பி விடை காண முயன்ற ஆய்வுகளில், பண்டைய நாகர் இனத்தினருடன் தொடர்புபடுத்தும் வி.கனகசபை அவர்களுடையது (‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’) பல புதிய செய்திகளை முன்வைகிறது. அதுபோலவே, மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் ‘சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்’ நூலும் அருவாளர்களை ஆய்வுசெய்கிறது. களம் அமைத்துள்ள இவர்கள் கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல், ஒரு புதிய செய்தியை முன்வைப்பது ஆய்வு நெறிப்பட்ட ஒன்றாக இருக்காது. இவ்வாய்வு, காரவேலன் பகுதியை வெகுவாக நீட்டிவிடும் என்பதால் விலகியிருந்தேன். ஆனால், அறிமுகம் அளவிலாவது அது இருந்திருக்க வேண்டும் என்பதை உங்கள் பதிவு ஏன் எழுந்தது என்று நான் கேட்டுக்கொண்டபோது உணர்ந்தேன்.

***

மணி பாரியின் இரண்டாம் பதிவு
காரா என்றால் "எருமை" என்று பொருள் - செந்தமிழ் அகராதி பக்கம் 178. வேல/வேள என்றால் வெளிர் என்று பொருள். காரவேள என்றால் எருமை (நாட்டு) வேளிர் என்று பொருள். கார வேள என்பதும் கவேரன் என்பதும் வேறு வேறானது என்பதை ஒப்புகிறேன். தங்கள் குறிப்பிடும் "ஆவ அரசன்" என்று அத்திகும்ப குறிப்பிடும் சொற்கள் அதிக்கும்ப கல்வெட்டில் இல்லை. அப்படி இருக்குமாயின், அச்சொல்லை ஆங்கிலத்திலும், பிராகிருத மொழியை தமிழ் எழுத்திலும் தந்தால், என்னை திருத்திக்கொண்டு செழுமைப்படுத்திக்கொள்ள ஏதுவாகும். "தாமிர தேக சங்காத்தம்" என்ற தொடர், அக்கல்வெட்டில் 11-வது வரியில் இடம் பெற்றிருக்கிறது. நான், விக்கிபீடியா முலம் இக்கல்வெட்டு விவரத்தை படித்தேன்.
வரலாற்றுக்கலையில் நான் விரல் எடுக்கப்படாத ஏகலைவன். பெரிய வரலாற்று அறிஞர்களின் புத்தகங்களை அதிகம் நான் படித்ததில்லை, இருப்பினும் எம் முன்னோர்கள் வரலாற்றை அதன் காலம் - சமூகம் - சூழல் இவற்றோடு பொருத்தி புரிந்துகொள்ள முயன்று வருகிறேன். தங்கள் தொடரின் மூலம் தங்களிடமும் தற்போது கற்று வருகிறேன். தொடரட்டும் தினமணியின் வரலாற்று விழிப்புணர்வுப் பணி.
பதில்
  • ‘காரா’ என்பது எருமை என்பதைச் சுட்டும் சொல் என்பதில் உடன்படுகிறேன். அதனால், காரவேளன் எருமை நாட்டின் அதாவது இன்றைய மைசூர்ப் பகுதியின் வேள் என்பதில் வேறுபடுவேன். ஏனெனில், எருமை நாட்டில் இருந்து காரவேலனின் முன்னோர் கலிங்கம் சென்று ஆட்சி அமைத்து, வேளிர் நிலையில் இருந்து வேந்தன் நிலைக்கு உயர்ந்தனர் என்று கொள்வதற்கு, வட புலத்தில் கிடைக்கும் சான்றுகள் இடமளிக்காது உள்ளன.
  • நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விக்கிப்பீடியாவின் காரவேலன் அத்திக்கும்பா கல்வெட்டுப் பக்கங்கள் பார்த்தேன். அது முரண்படும் இடங்களே உங்கள் முரணான நிலைப்பாட்டுக்குக் காரணம் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியா, இப்பதிவில் தமிழ், ஆங்கிலம், பிராகிருத ஒலிப்பின் தமிழ் வரிவடிவம் என மூன்று வடிவங்களில் வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில வடிவம், கே.பி. ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி அளித்தவை. இதன் மொழிபெயர்ப்பே தமிழ் வரிவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிராகிருத ஒலிப்பின் தமிழ் வரிவடிவம் இவர்களின் படித்தறியும் வடிவமல்ல. அது, சதானந்த அகர்வாலுடையது. இதுவே உங்களை முரணான நிலைப்பாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. என்னுடைய அத்தியாயம்-2 பதிவிலேயே, சதானந்த அகர்வால் தமது படித்தறிதலில் ஆவா அரசர்கள் பற்றி குறிப்பு இல்லை என்று மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளேன்.
சாதானந்த அகர்வாலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும்அத்தியாயம் 2-ல் அளித்துள்ளேன். அதன்படி, தமிழர் கூட்டுப்படை இருந்ததை அவர் அங்கீகரிக்கிறார். நீங்கள் குறிப்பிடும் தேகம், அதாவது உடல், குருதி என்ற பொருளை அவர் காட்டவில்லை என்பது புலனாகிறது.
விக்கிப்பீடியா, உரிய குறிப்பு கொடுத்து தம்பதிப்பை திருத்திக்கொள்ள வேண்டுவோம்.

***

மேலாக, தரம் தாழ்ந்த பதிவுகள், தொடர்பற்ற செய்திகளைக் கொண்டு வாதிடல், தனிநபர் விமரிசனம், இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் பதிவுகளைப் புறக்கணித்திருப்பது என்றும், கட்டுரைகளின் செய்திகளுடன் தொடர்புடைய எந்த வினாவுக்கும், பதிவுக்கும் மதிப்பளித்து பதில் அல்லது ஆலோசனை வழங்குவது, சரியான சுட்டிக்காட்டல் என்றால் ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லாதிருப்பது என்ற முடிவின் அடிப்படையிலேயே உங்கள் பதிவுகளுக்குத் தக்க பதில் தரப்பட்டது என்பதை தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த எண்ணிக்கை அதிகத்தில் கற்றிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமிதமோ, மேலான எண்ணமோ இல்லை. நான் எவ்வாறு அவற்றை உள்வாக்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறேன் என்பதில்தான் உணர்வுப்பூர்வமாகக் கவனத்துடன் இருக்கிறேன்.
அவ்வையார் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்றார். கைம்மண் அளவு என்பது அவருக்கு மட்டுமே பொருந்தும். எனக்கோ, இந்த உலகே ஒரு புல்வெளி என்றால், நான் கற்றது ஒரு புல் இதழின் நுனிப்புல் அளவே. இந்த உணர்தல் எப்போதுமே எனக்குள் இருக்கும்.
என் பதிவுகள் என்னிடமிருந்து உங்களை விலக்கிவைக்கும் எனில் நான் வருந்துவேன். புகழ்ச்சி வார்த்தைகளைவிட உங்கள் பதிவுகள் எனக்கு வெகுமதியானவை.
அன்புடன்.
த.பார்த்திபன். தருமபுரி.

***
கமலேசன், வம்சி கிருஷ்ணா ஆகியோரின் மின்னஞ்சல் கேள்விகளுக்கான  என் பதில் அடுத்த வாரம் இடம்பெறும்.

  • Mani Pari
    1 Day ago
    கல்லாடனார் வேளிர்களை "அரி வழிவந்த பன்றிக்குட்டிகள்" என்கிறார் . அண்டிர-துண்டிரவேளிர் பன்றி கொடி உடையவர்களே. வேள்புலத்து வேளிர் பன்றிக்கொடி உடையவர்கள் ,அதன் அடியாகவே "பன்றி வேளிர்" என்று குறிப்பிட்டேன் . தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயம் என்பது வேள் புலம் என்ற பன்றிநாடாக இருக்கலாம் .பன்றி நாடு மொழி பெயர் தேயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது . கொடைக்காணல் -திண்டுக்கல் பகுதி பன்றி நாடு என்றும் அதை ஆண்டவன் "பண்ணி(பன்னி)" என்றும் அழைக்கப்படுவது அறிக.
  • N. Murali Naicker
    1 Day ago
    மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், புறநானூற்றில் குறிக்கப்பெறும் "புலிக்கடிமாலின்" வழிவந்தவர்கள் "ஹோய்சாளர்கள்" என்றும் திருவண்ணாமலையில் ஹோய்சாளர்கள் வழிவந்த மன்னன் "வீரவல்லாளன்" என்பவன் ஆண்டதை "அருணாச்சலப்புராணம்" என்னும் இலக்கியம் குறிப்பிடுவதாக தன்னுடைய "திரவிடத்தாய்" என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அப்புத்தகத்தில் அவர் "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் "வேளிர்கள்" என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.


    கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. ஹோய்சளர்களின் லட்சனையான "கண்ட பேரண்டமும்" அம்மன்னனது சிலையும் திருவண்ணாமலை கோயிலில் உள்ளது. மேலும் அக் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன்னனுக்கும் அவனது "க்ஷத்ரிய சந்ததியர்களுக்கும்" சிறப்புகள் செய்யப்படுகிறது. இத்தகைய புகழ் மிகு ஹொய்சால மன்னர்கள் தங்களை "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய "யது வம்சத்தில்" தோன்றிய க்ஷத்ரியர்களான ஹொய்சாளர்களின் உறவினர்கள் தான் "ராஷ்டிரகூடர்களும்", "சாளுக்கியர்களும்", "காலசூரிகளும்' ஆவார்கள்.


    கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகரம் நிகண்டு சாளுக்கியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள் "கேழல் (பன்றி) கொடியைச் சின்னமாகக் கொண்ட சளுக்கை வேந்தர் வேள்புலம் என்னும் பகுதியை ஆண்டனர்" என்று குறிப்பிடுகிறது. கி.பி.578 ஆம் ஆண்டை சேர்ந்த பாதாமிக் கல்வெட்டு ஒன்றில் சாளுக்கியர்களின் தோற்றம் பற்றி குறிப்பிடுகிறது. கார்த்திகேயன் (முருகன்) என்னும் கடவுளை வழிப்படுபவர்கள் என்றும் மாள்வ்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரீதி என்பவரின் பிள்ளைகள் என்றும் பன்றிக் கொடியை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகள் அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர குலத்தில்" தோன்றியவர்கள் என்றும் "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறது. சீன யாத்ரிகன் யுவான் சுவாங் மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை "க்ஷத்ரியன்" என்று குறிப்பிட்டுள்ளான். சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "துவராபதி வேளிர்" (முகில் வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) என்றும் "அக்னி குலத்
  • N. Murali Naicker
    1 Day ago
    பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் என்ற பெயரில் "வன்னியர்களும்", "நத்தமான்களும்" குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.


    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-


    "பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள். பிறகு இவ்வூரை மூன்றாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் "திருவையாறுடையான் கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்", நத்தமான் உடையாரில் "நாந... வன்னாடுடையானும்" வாங்கியுள்ளார்கள். இவர்கள் வாங்கிய பிரம்மதேச ஊரை, பிரம்மதேசமுடையப் பள்ளிகளான (வன்னியர்களான) :-


    "நாட்டரையனுக்கும்",

    "புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",

    "புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",

    "புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",

    "சோமன் புலியனுக்கும்"


    இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர பிராமணர் முதல் வெள்ளாளர் உள்ளிட்டார்களுக்கும் பள்ளிக்கும் (கோயிலுக்கும்) விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-


    "மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),

    "கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",

    "இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.


    இத்தகைய மாட்சிமை பொருந்திய "ராஜ குல சந்ததியர்களான" வன்னியர்கள், சுருதிம
  • N. Murali Naicker
    1 Day ago
    "துண்டநாடு உடையார்கள்" என்ற வன்னிய குறுநில மன்னர்கள் சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களை பற்றி இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் "வேளிர்கள்" ஆவார்கள். சோழ மன்னன் வீர ராஜேந்திரனின் (கி.பி.1067) கல்வெட்டில், துண்டநாடு உடையார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர் "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்" என்பவராவார்கள்.


    இந்த குறுநில மன்னனைப் போலவே, முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1099) ஆட்சிக் காலத்தில் "துண்டநாடு உடையார் சோழ குல சுந்தரன் கல்யாணபுரம் கொண்டார்" என்ற துண்டநாடு உடையார் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள். இவரை அக் கல்வெட்டு "தேனூர் உடையான்" என்று குறிப்பிடுகிறது. இவர் மகா பராக்கிரம சாலியாக இருந்திருப்பார் என்பது இவர் பெயரான "கல்யாணபுரம் கொண்டார்" என்பதில் இருந்து தெரியவருகிறது. கல்யாணபுரம் என்பது "சாளுக்கிய தேசமாகும்". இந்த துண்டநாடு உடையார் நிச்சயமாக "கலிங்கத்து போரில்" பங்கேற்றிருக்கிறார் என்பதும் அவர் சாளுக்கிய தேசத்தை வென்றதின் காரணமாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் அவருக்கு "கல்யாணபுரம் கொண்டார்" என்ற பட்டத்தினை வழங்கியிருப்பார்கள் என்பதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. இத்தகைய "துண்டநாடு உடையார்கள்" கல்வெட்டுகளில் "வாணகோவரையர்" என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வாணகோவரையர்கள் "பள்ளி" என்றும் "வன்னியன்" என்றும் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர். வாணகோவரையர் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். {The Nandi plates of Rastrakuta Govinda III (806 A.D) record the grant by Govinda III, at the request of "Kshatriya Mahabali Banaraja", named Sriparama, of the village of Kandamangala, to Isvaradasa, head of the Sthana (i.e. Matha) in the temple on the Nandi Hills}.


    வன்னியர்களின் பிரிவினரான "சுருதிமான்கள்" தங்களை "இருங்கோளர்" என்று குறிப்பிடுகிறார்கள். சம்பு மாமுனிவனின் வேள்வி குண்டத்தில் இருந்து பிறந்ததால் "வன்னியர்கள்" எனப்பட்டனர். வன்னி என்றல் நெருப்பு (தீ) என்று பொருள். எடுத்துக்காட்டு "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று எங்கள் குல திரௌபதியை வில்லிப்புத்தூரார் அவர்கள் தன்னுடைய பாரதத்தில் குறிப்பிடுகிறார்கள். எனவே நெருப்பில் இருந்து பிறந்தவர்களை (குல முதலோர்) "வன்னியர்கள்" என்றனர். ச
  • N. Murali Naicker
    1 Day ago
    கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை மூவர் கோயில் சமஸ்கிரத கல்வெட்டில் "யது வம்சம்" என்றும் "யாதவர்" என்றும் குறிப்பிடுகின்றனர். அங்கு அவர்களின் கன்னட மொழி கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவர்கள் "சோழர்களுக்கு" மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை "இருக்குவேள்" என்றும் "இளங்கோவேள்" என்றும் "இருங்கோளன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.


    சோழர்கள் காலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார் கோயில், விளந்தை, உடையார்பாளையம் போன்ற பகுதிகள் "இருங்கோளப்பாடி" என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. வெள்ளாற்றின் இருபுறங்களிலும் சோழர்கள் காலத்தில் வேளிர்களான "இருங்கோளர்கள்" ஆட்சிபுரிந்தார்கள். சங்ககாலத்தில் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்கள். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" சோழ மன்னனான கரிகாலச் சோழன் வென்றிருக்கிறான். இவனது தலைநகரான "பிடவூர்" என்பது இன்றைய காட்டுமன்னார் கோயில் தாலுக்காவில் உள்ள "புடையூர்" ஆகும். இது வெள்ளாற்றின் தெற்கு கரையோரத்தில் உள்ளது. முற்காலச் சோழனான கோசெங்கண்ணான் விளந்தையில் ஆட்சிபுரிந்த வேளிரான "விளந்தை வேளை" போரில் வென்றிருக்கிறான். இன்றைய உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள விளந்தையானது, கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இருங்கோளப்பாடி நாட்டு "விளந்தை கூற்றம்" என்று வழங்கப்பட்டது.


    வெள்ளாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள எறும்பூரில் உள்ள முதலாம் பாராந்தகச் சோழன் (கி.பி.935) கல்வெட்டு "இருங்கோளன் குணவன் அபராஜிதன்" என்ற வேளிர் மன்னரை பற்றி குறிப்பிடுகிறது.


    காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு (கி.பி.959), "இருங்கோளர் கோனான நாராயணன் புகளைப்பவர் கண்டன்" என்று குறிப்பிடுகிறது. இவர் சுந்தர சோழனின் கல்வெட்டில் (கி.பி.962) "இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.


    கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு வேளிர் அரசனான "இருங்கோளன் நாரணன் பிரித்திவிபதியார்" என்பவரை குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது (இருங்கோளர்) மகள் "வானவன் மாதேவியார்" உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாவர்கள்.


    கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு "இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன்" என்ற வேளிர் குல மன்னனை பற்ற
  • N. Murali Naicker
    1 Day ago
    சங்க இலக்கியங்கள் சேரரை "மலையர்" என்று குறிப்பிடுகிறது. சேரர்களின் கிளை மரபினர்களான "மலையமான்கள்" தங்களை சேதிராயர்கள் என்றும் மிலாட்டுடையார் என்றும் கோவலராயர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள "திருக்கோயிலூரே" மலையமான்களின் தலைநகராகும். சங்ககாலத்தில் இவ்வூர் "திருக்கோவலூர்" என்று அழைக்கப்பெற்றது. மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. 


    குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-


    "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்

    பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்

    பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"


    (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனான
  • N. Murali Naicker
    1 Day ago
    தமிழ் நாட்டின் ராஜ குல வம்சத்தவர்கள் 
    ======================================


    தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு அரசால்பவர்கள் "வேந்தரும் வேளிரும்" ஆவர். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இதை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன (பண்கெழு வேந்தரும் வேளிரும், இருபெரு வேந்தரொடு வேளிர்). வேளிர் என்பவர்கள் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்த பண்டைய மரபினர் ஆவர். வேளிர் என்பவர்கள் "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் அதாவது "அக்னியில்" உதித்தவர்களாவர். பண்டைய வேளிர் குல இருங்கோவேளும், சாளுக்கியரும், வேள் எனப்படும் வேள்வி செய்யும் யாக குண்டத்தில் தோன்றிய முனிவர் வழி வந்தவர்கள் ஆவர். துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள். புறநானூறு பாடல்கள் (201 & 202) நமக்கு இக் கருத்தை வலியுறுத்துகிறது.


    பண்டைய அரசர்களான சேரர்கள் "அக்னி குலத்தவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் (செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகும் புகழ் சேரன்). வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யதுவம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


    சேர மன்னர் குலசேகர ஆழ்வார், யது குலம் (என்னும்) யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ண பகவானைக் "எங்கள் குலத்தில் பிறந்தவரே" என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது "யது (என்னும்) யாதவ குல கிருஷ்ண பகவானை" குலசேகர ஆழ்வார் அவர
  • N. Murali Naicker
    1 Day ago
    மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு 
    =============================================
    குறிப்பிடும் அக்னி குலத்தின் தோற்றம் 
    ====================================


    உயர்குடி வகுப்பினர்களான "க்ஷத்ரியர்கள்" வேள்வித் தீயில் இருந்து பிறந்தவர்கள் என்பது ஐதீகமாகும். அதாவது அவர்களது முன்னோர்களின் மூலவர் அக்னி குண்டத்தில் இருந்து உதித்தவர்கள் என்பது புராணத்தின் கூற்றாகும். சங்கப்புலவர் கபிலரும் இதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் மிகத் தெளிவாக நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள். பிற்காலப் புலவரான "கம்பரும்", "இரட்டைப் புலவர்களும்" இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். 


    அரியலூர் மாவட்டம் ஊட்டத்தூரில், திருபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 40 வது ஆட்சியாண்டு கல்வெட்டு (1218 A.D) வேள்வித் தீயில் பிறந்த "சுருதிமான் முப்பனார் சமூகத்தவர்களைப்" பற்றி குறிப்பிடுகிறது. சுருதிமான்கள் காசியப்ப முனிவரது வேள்வி குண்டத்தில் இருந்து பிறந்து இரண்டு அரக்கர்களை அழித்தார்கள் என்றும் அவர்கள் "இடங்கை வகுப்பினர்கள்" என்றும் அக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுருதிமான்கள் தங்களது பூர்வீக வரலாற்றை, அதாவது வேள்வித் தீயில் இருந்து பிறந்தவர்கள் என்பதினை அறியாமையின் காரணமாக மறந்திருந்தார்கள் என்பதையும் அச் சோழர் காலத்துக் ஊட்டத்தூர் கல்வெட்டு மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.


    சுருதிமான்கள் குறிப்பிடும் "வேள்வித் தீயில் பிறந்த வரலாறு" என்பது "வன்னிய புராணத்தின்" சாராம்சமாகும். சம்பு மாமுனிவன் வேள்வித் தீயில் இருந்து வன்னியர்கள் பிறந்தார்கள் என்று வன்னிய புராணம் குறிப்பிடுகிறது. வன்னியர்களையும் சுருதிமான்களையும் போலவே நத்தமான் உடையார்களும் "குக முனிவரது வேள்வித் தீயில் இருந்து பிறந்து இரண்டு அரக்கர்களை அழித்தார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். 


    எனவே "வன்னியர்கள்", "சுருதிமான்கள்" மற்றும் "நத்தமான்கள்" உயர்குடி "க்ஷத்ரிய மரபினர்கள்" ஆவார்கள். வேளிர் மரபினர்களான ஹோய்சாலர்களும், சாளுக்கியர்களும், ராஷ்டிரகூடர்களும், தங்களை "அக்னியில் இருந்து பிறந்த க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் தங்களை "யது வம்சம்" (யாதவர்) என்றும் குறிப்பிடுகிறார்கள். வன்னியர்களான பிற்கால மலையமான் மன்னர்கள் தங்களை "வன்னிய நாயன்" என்றும் "வன்னிய மக்கள் நாயன்" என்று "வன்னியன்" என்றும் "பள்ளி" என்ற
  • Mani Pari
    2 Days ago
    1)" கரு முகிற்கனி கட்பிறை செந்தழர் ,அரிதரு குட்டி ஆய பன்னிரண்டு " என்ற கல்லாடனார் வாக்கிற்கு விளக்கமாக கூறியவையே நச்சினார் கினியரின் உரைக்கூற்றான "நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் வழிக்கன் வந்த" என்ற கருத்தாகும் . கல்லாடனார் "அரிதரு " என்பதையே நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் "வழிக்கன் வந்த ' என்று நசினர்கினியர் குறிப்பிடுகிறார் , அதையே நானும் திருமாலை அரி என்று குறிப்பிட்டேன் . புலிகடிமால் வழிவந்தவர்களே எல்லா வேளிர்களும்.சேரமான் .எயமான், துண்டிர மான்,ஓய்மான் என்பவற்றில் வரும் மான் என்ற பின்னொட்டு மால் என்பதன் திரிபே.2) நெல்லூர் மல கொண்ட கல்வெட்டில் வரும் நந்த என்ற சொல் நன்னா னோடு தொடர்பற்றது என்றால் ,நீங்கள் வடநாட்டு நந்த பேரரசரின் எல்லை நெல்லூர் வரை இருந்ததாக பொருள்கொள்ளவேண்டி வரும் , அது சரியாகுமா?
  • Mani Pari
    2 Days ago
    தொல்காப்பியம் உரை எழுதியோர் , தலைமக்கள் /உயர்தினைமக்கள்/பெருங்குடி மக்கள் என்பவர்கள் ஐந்திணைக்கும் உரியவர்களாகவும் , ஒவொரு திணைக்கும் உரிய மக்களை திணைகுடிமக்கள்/சிறுகுடிமக்கள் என்பர் . ஆகோள் பூசலில் தலைமக்களே ஈடுபடுவர் அவர்களில் அரசர்களும் வேளிர்களும் உண்டு , அவர்களுக்கு நடுகல் நடப்பட்டதாக வும் , பொதுமக்களை திடீர் இக்கட்டிலிருந்து காத்த தினைகுடிமக்களுக்கும் ,சிதை ஏறிமாண்ட வீரர்களின் மனைவிகளுக்கும் , மக்களை காத்த சேவல் ,நாய் போன்றவற்றிற்கும் நடுகல் உண்டு . தமக்காக உயிர் துறந்த வற்றின் நினைவை போற்றி வழிபடுபவது மரபு . "இல்லடுகள்ளின் சில்குடிச் சிருர்ப் ,புடை நடு கல்லி நாட்பலி யூட்டி" -புறம் , மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார் பாடியது . வேடியப்பன் வேட்டப்பன் என்பது கோக்கள் , இளங்கோக்கள் (வாணியர் / வணியர்) என்பாருக்கு " வேட்டல் " என்பதடியாக வந்த பெயராகலாம். (பலி =வேட்டல் ).
நன்றி :-தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment